நீர்நிலைகள் மற்றும் அவற்றின் தேவை பற்றி அறிஞர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். நீர் மேலாண்மை முக்கியத்துவத்தை ஆதங்கத்துடன் வலியுறுத்துகிறது.
நீர் மேலாண்மை பற்றி வரலாற்று பார்வையில் விளக்குகிறது. நீர் பயன்பாடு பற்றிய அறிவை வளர்க்காமல் போனது பற்றிய தவறை சுட்டுகிறது. நதிக்கரையில் வாழ்ந்த நாகரிக சமூகத்தின் உயர்வை பேசுகிறது. நிலத்தில் குடியேறிய பின், நீர் தேவையை நிறைவு செய்ய தவறான வழிமுறைகளை பின்பற்றியது பற்றி உரைக்கிறது. தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தான், மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக புரிய வைக்கிறது.
உலகின் மற்ற நாடுகள், பிற மாநிலங்கள் நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி புரிய வைக்கிறது. பல்வேறு தலைப்பில் அமைந்த கட்டுரைகள் நீருடனான அனுபவத்தை மனம் நெகிழும் வகையில் விளக்கும் நுால்.
-– மதி