திருக்குறள் பாக்களின் பொருளை எளிய நடையில் உரைக்கும் நுால். தேர்வு செய்த குறள்களுக்கு விளக்கம் தருகிறது. நுாதன முறையில் உள்ளவை பற்றியும் தகவல்களை தருகிறது.
சில குறள்களில் பொருளுக்கு ஏற்ப கருத்து உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான குறட்பாக்களை கண்டறிந்து சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சொல்லும்போது உதடு ஒட்டாத வகையில், 24 குறள்கள் இருப்பதாக எடுத்துக்காட்டுகிறது.
தமிழின் முதல் உயிர் எழுத்தில் துவங்கி, இறுதி மெய் எழுத்தில் முடியும் குறள்கள், 10 உள்ளதாக குறிப்பிடுகிறது. தெய்வம் என்ற சொல் வருபவை ஆறு உள்ளதாக குறிப்பிடுகிறது. ஒரே சொல் ஆறு முறை வரும் குறள் ஒன்று உள்ளதாக குறிப்பிடுகிறது. இது போல் சிறப்புகளை விவரிக்கும் நுால்.
– ராம்