தேவதாசி முறையை மதுராம்பா என்ற பாத்திரத்தை மையப்படுத்தி நகர்த்தும் நாவல். விதிக்கப்பட்ட வாழ்க்கையை விடுத்து, மணம் முடித்து குழந்தைகளுக்கு தாயாகிறார் பெண். முதன்முறையாக தேவதாசி வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறார். நடனக் கலையையும் ஒதுக்குகிறார். நடனத்தை விரும்பும் பேத்தியை எண்ணி அதிர்ச்சி அடைகிறார்.
அது தொடர்பாக முடிவு எடுப்பதை போராட்ட உணர்வுடன் பேசுகிறது. பெண்களுக்கு எது பாதுகாப்பு, எது கவுரவம் என புரிய வைக்கிறது. அறிவு, ஆற்றலால் பெண் உயர்ந்தாலும், அடிமை மனதுடன் பார்ப்பதை சாடுகிறது. ஏளனம் பேசுவோர் மனசாட்சியை உலுக்குகிறது. தேவதாசி முறையை ஒழித்தும், அதே கண்ணோட்டத்தில் பார்ப்போரை கண்டிக்கிறது. பெண் வாழ்வை பேசும் நுால்.
– டி.எஸ்.ராயன்