இளைஞர்களில் பலர் படித்து முடித்தவுடன் தொழில் செய்ய விரும்புகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அவர்களுக்கு தகுந்த தொழில்களை எடுத்துக் கூறி அவர்களை வழிநடத்துவது மிகவும் முக்கியம்.
அதுபோன்ற தொழில்களையோ அல்லது அதுபோன்ற தொழில்களில் கிடைக்கும் வினியோக வாய்ப்புகளையோ செய்ய இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இது தவிர புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் தகுந்த தொழிலை தேர்ந்தெடுக்க ஆலோசனைகளை சிறப்பாக தரும் சிறந்த புத்தகம்.
நாடறிந்த வங்கியாளரும், வணிக எழுத்தாளரும், ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட் அப் தொழில்களில் ஆலோசகருமான சேதுராமன் சாத்தப்பன், வெற்றியாக நடத்த வாய்ப்புள்ள 100 ஸ்டார்ட் அப் தொழில்களை தேர்வு செய்து, அதன் சிறப்புகள் குறித்து எளிமையான தமிழில் அவருக்கே உரித்தான நடையில் எழுதி உள்ளார்.
புதிதாக தொழில் துவங்க விரும்புவோருக்கு இது பயன்படும். இந்த புத்தகத்தில், 100 புதுமையான தொழில்களை பற்றி விரிவாக எடுத்துக் கூறியது மட்டுமல்லாமல், அது சம்பந்தமாக மேலும் அறிந்து கொள்ள வசதியாக, 150-க்கும் மேலான இணையதள முகவரிகளையும் கொடுத்திருப்பது சிறப்பு.
மேலும் சந்தேகங்களுக்கு ஆசிரியரை தொடர்பு கொள்ள அவருடைய தொடர்பு எண்ணும் கொடுத்திருப்பது சிறப்பு.
மொத்தமாக கூறப்போனால் இது ஒரு சிறந்த தொழில் வழிகாட்டியாகும். தொழில் துவங்க விரும்புவோருக்கு உதவும்.
– இளங்கோவன்