காந்தியின் கொள்கையில் வாழும் பெண்ணின் விடுதலை உணர்வை வலியுறுத்தும் நாவல். அரசியலை இளம் உள்ளங்களில் ஏற்படுத்த வேண்டும் என துடிக்கும் கொள்கையுடன் பயணிக்கிறது.
காதலன் மீது வெறுப்பு, தன்னை விரும்பும் நபர், மணமுடித்து வைக்க துடிக்கும் பெற்றோர் என, பலதரப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டங்களை எப்படி எதிர்கொள்கிறார், திருமணம் நடந்ததா என சுவாரசியம் குறையாமல் உணர்ச்சி பொங்க பேசுகிறது.
இயல்பாக வாழத் துடிக்கும் பெண்களின் போராட்ட உணர்வை வெளிக்கொண்டு வருகிறது. சுற்றி நடக்கும் அவலங்களை, பெண் கேள்வி கேட்கும்போது எழும் கோபத்தை வெளிக்காட்டுகிறது. பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளையும் தோலுரிக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்.
-– -டி.எஸ்.ராயன்