பண்பாட்டு நிகழ்வுகளுக்குப் பின் உள்ள சமூகவியல், உளவியலை உள்வாங்கி நாட்டுப்புறவியலை ஆய்வு செய்து வருவதை வெளிப்படுத்தும் நுால்.
இலக்கிய ஆய்வுலகில் நாட்டுப்புறவியல் ஒரு அறிவுப்புலமாக மாறியுள்ளதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு ஊர்த்திருவிழாவோடும் நாட்டார் கதைப்பாடலோ, காப்பியமோ, தொன்மமோ, கட்டுக்கதையோ தொடர்புடையதாக இருப்பதை உணர்த்துகிறது.
மதுரைவீரன், பழையனுார் நீலி போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறுகளால் அக்காலச் சமுதாய அமைப்பை அறிய முடிகிறது. இலக்கியங்களிலும், திரைக்காட்சிகளிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கிராமியக் கலைகள் கொண்டுள்ள செல்வாக்கை வெளிப்படுத்துகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு