விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்து தமிழ் மொழியின் சுவையில் கலந்து தெய்வ பக்தியில் சங்கமிப்பதே திருப்பாவை என விளக்கும் நுால்.
ஒவ்வொரு பாசுரங்களின் பின்புலத்தில் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. தமிழர்களின் தொலைநோக்குப் பார்வையை அறியச் செய்கிறது. மழை, மேகம், பறவையினங்கள், மலர்கள், நதிகள் என இயற்கையின் அம்சங்களில் இறைவனைக் கண்டு வணங்கும் பக்தியின் எளிமையை சுட்டிக்காட்டுகிறது.
தோழியரை ஆண்டாள் எழுப்பும் பாசுரங்களில் நுட்பங்களைப் பார்க்கும் போது மனம் விழித்துக் கொள்கிறது. வேதங்களும் கீதையும் உணர்த்தும் மேலான ஆன்மிக ஞானம் திருப்பாவையில் புதைந்துள்ளது.
– தி.க.நேத்ரா