சேர நாட்டின் வரலாற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். மலை பிரதேசம், கடற்கரை பகுதியை வணிகத்துக்கு கையாண்டதை கூறுகிறது. மன்னன் இமயவரம்பனின் போர் குணம், ஆட்சி செய்த விதம், பரவிய நோய், பசியை விரட்டியது, மக்கள் செல்வ செழிப்புடன் வாழ எடுத்த முயற்சிகளை விவரிக்கிறது.
பல்யானை செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிகள் பற்றி கூறுகிறது.
வரி வாங்கும் முறையை சொல்கிறது. கொல்லி நாட்டை வென்று தனதாக்கி கொண்டு, விளைச்சலை அதிகரிக்க செய்த சேரமான் மாந்தரஞ்சேரல் ஆற்றலை பேசுகிறது. சேரர்களின் வரலாற்றை அறிய உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்