துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சிறுகதை நுால்.
பத்து ரூபாய் நோட்டு, முன்னுாறு நிமிடங்கள் கதைகள் திகில் ஊட்டுகின்றன. எளிய மனிதனின் ஆசைகள் நிறைவேறியதா என, ‘அவனா இவன்’ கதை கேட்கிறது.
ஓய்வு பெற்றபின், அனுபவங்களை பகிரும் ‘பொம்மலாட்டம்’ கதை திரும்பி பார்க்க வைக்கிறது. ஊட்டி விடுதி அறையில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையாக, உடல்- பொருள் -ஆவி’ கதை சிரிக்க வைக்கிறது.
மணப்பெண்ணின் மனக்குழப்பம் எப்படி தீர்ந்தது என, ‘விடிந்தால் மறுதினம்’ கதை விடை காண்கிறது. எழுத்தாளர் உருவம் போல் முகமூடி அணிந்து, மோசடிகளை கண்டுபிடிக்கும் துப்பறியும் ஏஜன்டின் செயல்பாடு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது.
சுவாரசியம் ஏற்படுத்தும் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்