வாழ்வியல் படிப்பினைகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்தும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளை பேசுவதாகவே இருக்கிறது.
காதல் கொண்ட மனது, விளையாட்டு வார்த்தைகள் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை, ‘மனதில் பூத்த மத்தாப்பு’ கதை தெரிவிக்கிறது. பருவ வயது பெண்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை யாராலும் எளிதில் யூகித்து விட முடியாது என்பதை, ‘வயசுக் கோளாறு’ கதை விவரிக்கிறது.
மனைவியை மதிப்பாக நடத்துபவன் சிறப்பாக வாழ்வான் என்பதை மாசானம் பிள்ளை வழியாக சொல்லும் ‘பேறு’ கதை சிறப்பு. ஒவ்வொன்றிலும் உறைந்திருக்கும் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. வீடு, சமூகப் பிரச்னைகளை தொட்டுக் காட்டும் நுால்.
– ஊஞ்சல் பிரபு