ஆசிரியர்-லேனா தமிழ்வாணன்.வெளியீடு:மணிமேகலை பிரசுரம்,சென்னை.விலாசங்கள் மாறக் கூடியவை என்றாலும், சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள கதவு எண்களின் மாற்றங்கள், தொலைபேசி எண்களின் மாற்றங்கள் ஆகியவை குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியவை என்றாலும்,இத்தகைய இடர்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்ற அடிப்படையிலும்,இத்தகைய ஒரு நூலை வெளிக் கொணர்வது பலருக்கு உதவியாக இருக்கும் என திரு.லேனா தமிழ்வாணன் அவர்களைத் தலைவராகக் கொண்ட மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு முடிவு செய்தது. தமிழகத்தில் வாழும் மற்ற மாநிலத்தவர்கள்,தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்,வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்ற அடிப்படையில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.