வரலாற்றுப் புதின எழுத்தாளர் விக்கிரமனின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சமூகப் பார்வையில் ஆய்வு செய்துள்ள நுால்.
சிறுகதை இலக்கிய தோற்றம், வளர்ச்சி காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி, படைப்புச் சூழலுக்கேற்ப கதையோட்டத்தில் வெளிப்படுவதை விவரிக்கிறது. எழுதவிருக்கும் கதைக்கேற்ப படைப்புச் சூழலை உருவாக்கிய திறமையை முன்வைக்கிறது.
சாமானிய மனிதர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகள், மண வாழ்க்கை, காதல், ஏமாற்றம், தன்னம்பிக்கை காணப்படுவதை விவரிக்கிறது. ஜாதி, மத பேதமற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் உள்ளார்ந்த நோக்கம் அவரது காட்சிகளில் வெளிப்படுவதை விளக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு