கேரளாவில் ஒவ்வொரு கோவிலும் புதிய செய்தியை அல்லது வழிகாட்டுதலை தரக்கூடியதாக அமைந்திருப்பதை கூறும் நுால். ஆன்மிக ஈடுபாடுடையவர்களுக்கும், புனிதப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வகையில், 45 கேரளக் கோவில்கள் குறித்த வித்தியாசமான தகவல்கள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன.
தருமர் வழிபட்ட திருச்சிற்றாறு விஷ்ணு கோவில், அர்ச்சுனனுக்கு பாவங்களை நீக்கி மன அமைதியைத் தந்த ஆரணமுளா பார்த்தசாரதி கோவில் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
ஓணம் திருவிழா துவங்கிய திருக்காட்கரையப்பன் கோவில், சாம்ரா வட்டம் நிலா ஆற்றில் சாஸ்தா கோவில் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது.
– இளங்கோவன்