வேதாந்தத்தின் சாரம் இது என்று கூறும் ஆன்மிக நுால். வள்ளுவரின் திருக்குறள், திருமூலரின் திருமந்திரம் துணை கொண்டு கருத்துக்களை விவரிக்கிறது.
அடிப்படை வேதாந்தம், உண்மையான மகிழ்ச்சி அடையலாம், அறியாமைக்கு எது காரணம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எங்ஙனம், மனத்தை எப்படி துாய்மைப்படுத்திக்கொள்வது, யோகாவின் விதிமுறைகள், பக்தி யோகம், ஜீன யோகம், கர்ம யோகம், தியானம், தன்னையறிதல், வேதமும் ஹிந்து சமயமும் என்பனவற்றுக்கு விளக்கம் தருகிறது.
தத்துவங்களை விளக்குகிறது. இறுதியாக, ராமலிங்க சுவாமிகளின் சமரச சன்மார்க்கம் -உலகளாவிய வழிபாடு,- ஜோதி வழிபாடு என கூறுகிறது.
– முனைவர் கலியன் சம்பத்து