ஆயிரம் வெண்பாக்கள் கொண்ட கவிதை நுால். ஒவ்வொரு தலைப்பிலும் 10 வெண்பாக்கள் என்று, 90 தலைப்புகளில் பாடியுள்ளார். பாடுபொருள் வெவ்வேறாக இருப்பதும், எளிய சொற்களைக் கொண்டு அமைந்துள்ளதும் படிப்போருக்கு பயன்படும்.
‘புகழென்னும் போதைப்பொருள், கல்வி அழகே அழகு, மனிதம் மலரச் செய்வோம், சாதலின் பின்புமுண்டு வாழ்வு, வலிதே விதியின் வலி, நலவாழ்வு மையம், தண்ணீர் விட்டு வளர்ப்போம்’ என்கிறது.
‘தடைகளை உடைத்து தமிழை உயர்த்து, துாணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான், உயிரினும் மேலாம் உணர்’ என்ற தலைப்புகளில் வந்துள்ள வெண்பாக்கள் அருமை. வெண்பா இயற்ற விரும்புவோருக்கு கையேடாக உதவும்.
– முனைவர் கலியன் சம்பத்து