ஆசிரியர்-லேனா தமிழ்வாணன்.வெளியீடு:மணிமேகலை பிரசுரம். பக்கங்கள்:132.நேரம் பற்றிச் சிந்திப்பதும், படிப்பதும், கேட்பதும், பேசுவதும் எனக்கு மிகப் பிடிக்கும்.சிறகு முளைத்த பறவையாய்ச் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்றபடி வலம் வந்துகொண்டிருந்த நான்,என் தந்தையின் எதிர்பாராத மறைவினால் பத்திரிகை உலகம் எனும் தங்கக் கூண்டிற்குள் தள்ளப்பட்டேன்.ஒரே நாளில்,நேரத்தை என்ன செய்வது என்ற தெரியாமலிருந்த நிலைமை மாறி,இருக்கிற நேரத்தைச் சமாளிப்பது எப்படி என்கிற தலைகீழ் நிலைமை உருவாகிவிட்டது. இதில் போராடி வெளிவர நான் மேற்கொண்ட அனுபவ மற்றும் அறிவுச் சேகரத்தின் ஒரு பகுதிதான் இந்நூல்.