கல்வி பற்றிய அம்பேத்கரின் கருத்துகளை தொகுத்து எழுதப்பட்ட ஆவண நுால். கல்வியில் நுாலகம் கட்டாய அங்கமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
நாடு முழுதும் பொது பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே ஒருமுக சிந்தனையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மூடநம்பிக்கை கல்வி மசோதாக்களை முழுமூச்சாக எதிர்த்து உள்ளார்.
பொருந்தா திட்டங்களை முறியடித்ததில் பெரும்பங்கு அவரைச் சார்ந்தது. சாதனை மனிதனாக மாறியது இதைப் படித்ததால் தெரியும். அரசியலில் பிரவேசம் செய்வோருக்கு பயிற்சி அவசியம்; படிப்பைக் காட்டிலும் ஒழுக்கம் முக்கியம் என்பது அவரது ஆணித்தரமான கொள்கை.
– சீத்தலைச் சாத்தன்