தனி மனிதர் வாழ்க்கை அனுபவங்களை படிப்பினை தரும் நோக்கில் பதிவு செய்துள்ள நுால்.
பதினாறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன பரமேஸ்வரன், 25 வயதில் மீண்டும் வந்து குடும்பச் சுமையை ஏற்றதில் துவங்குகிறது. ஆறு தங்கையர், இரண்டு தம்பியர் என குடும்ப பொறுப்பை கரை சேர்த்த நிகழ்வு சுவாரசியமாக உள்ளது.
கார் மெக்கானிக்காக வாழ்க்கையைத் துவங்கி, அண்ணனாக, தந்தையாக வியக்கத்தக்க பண்புகளைக் கொண்டிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
கணவனாக கடுமையாக நடந்து கொண்டதும், புயலில் விழ இருந்த மரத்தைக் காப்பாற்றிய கனிவும் விவரிக்கப்பட்டுள்ளன.
தொழில் போட்டிகள், நம்பிக்கை துரோகங்கள், சண்டைகளை சாமர்த்தியமாக சமாளித்த விதம் என சமூகத்திற்குச் சொல்லும் பாடமாக அமைந்துள்ளது.
– புலவர் சு.மதியழகன்