சுதந்திரப் போராட்டத்தில், அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கலில், சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. அந்த பெண்களின் உழைப்பை, தியாகங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால்.
தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், குண்டு துளைத்த போதும் கொடியை கையில் ஏந்தியபடி போராடிய மாதங்கினி ஹஸ்ரா, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்சலை அம்மாள் பற்றி கூறப்பட்டுள்ளது.
உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி, தேவதாசிகளுக்கு அமைப்பைத் துவங்கிய பண்டித ரமாபாய் பற்றிய விளக்கங்கள் உள்ளன. புதிய தகவல் நிறைந்துள்ள களஞ்சியம்.
– இளங்கோவன்