காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள் ஆசாபாசங்களை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல்.
கதையின் நாயகி பெண்ணிய எழுத்தாளர், மென்மையானவர். புத்தகங்களிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டவர். சமரசம் செய்து கொள்ளாதவர். அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் உடையவர்.
நாயகன், விளையாட்டில் ஆர்வமுடையவன்; எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். இயல்பாகவே நடிப்புத்திறன் மிகுந்திருந்ததால், சினிமாவில் நடிக்க ஊக்குவித்து கதவை திறந்து வைக்கிறாள் நாயகி.
அதேபோல், நாயகி எழுதிய முதல் நாவலை பதிப்பித்து, சிறந்த எழுத்து ஆளுமையாக தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினான் நாயகன். உயர்வில் காட்டிய அக்கறை காதலாக மாறிய பின், நடந்தவற்றை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது.
– புலவர் சு.மதியழகன்