திவ்ய தேசங்கள் குறித்து விவரிக்கும் நுால். ஒவ்வொரு கோவிலின் தல வரலாறு, சிறப்பு, திருவிழாக்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 247 பாசுரங்கள் திருவரங்கம் மீது உள்ளன. ரங்கநாதர் குறித்த ஏழு அதிசயங்கள் உள்ளன என்றெல்லாம் அறியலாம்.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு திருக்கரம்பனுார் உத்தமர் கோவில் மும்மூர்த்திகள் தலமாக விளங்குகிறது. சைவர்களுக்கு பிச்சாண்டார் கோவில் எனவும், வைணவர்களுக்கு உத்தமர் கோவில் எனவும் விளங்குகிறது.
உப்பிலியப்பன், சவுரிராஜ பெருமாள், கெடில நதி என்ற பெயர் காரணங்கள் அவசியம் படிக்க வேண்டிய செய்திகளாகும். ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய அற்புத நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து