ஆன்மிகம், பழைய மற்றும் நவீன இலக்கிய படைப்பு, கட்டுரை, நேர்காணல் என பல்துறை கதம்பமாக முகிழ்கிறது அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ். பிரபல ஓவியர் மணியன் நுாற்றாண்டு, கவிஞர் மீரா பற்றிய சிறப்பு கட்டுரைகள் நெகிழ்வு தருகின்றன. கலை மற்றும் நடனம் குறித்த ஆக்கங்கள் கலகலக்கின்றன.
கவிதைகள், சிறுகதைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. ராம கதையின் தனித்துவத்தை காட்டும், ‘ராம அவதார் கதனம்’ பற்றிய பதிவு மனதில் நிற்கிறது. தமிழ் மொழியுடன் ஆன்மிக தொடர்பை தொட்டுக்காட்டும் ஆக்கமும் வித்தியாசத்தை விதைக்கிறது. எழுத்தாளர்கள் மற்றும் பல துறைகளில் புகழ் பெற்றவர்களுடனான அனுபவங்களை வெளிப்படுத்தும் படைப்புகள் சுவாரசியம் தருகின்றன. வானில் வண்ணங்களை வீசி சரவெடியாக மிளிர்ந்து அமுதமாகிறது இந்த இதழ்.
– சுடர்