‘எல்லாரும் இன்புற்றிருக்க...’ என்ற மென்மையான கோஷத்துடன் மலர்ந்துள்ளது விகடன் தீபாவளி மலர். ஆன்மிகத்தில் அபூர்வம், இசையில் நளினம், உடையில் மென்மை, உணவில் ஆரோக்கியம், பாரம்பரியத்தின் மேன்மை என, வண்ணங்களை விரித்து தகவல்களை வாரி வழங்கி கவர்கிறது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் குறித்து அபூர்வ தகவல்களை ஒரு கட்டுரை கட்டுரை தருகிறது. பிரபல எழுத்தாளர்களின் அட்டகாச சிறுகதைகள், நெகிழ்ச்சி கவிதைகள் ஆர்வமூட்டுகின்றன.
ஆங்கிலயேர் இங்கு அறிமுகம் செய்த காய்கறிகள் பற்றிய கட்டுரை, தஞ்சை தலையாட்டி பொம்மை பற்றிய தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. ஆன்மிகம், பண்பாடு, இலக்கியம், அனுபவப் பேட்டி என வண்ணங்களின் கலவையாக சிறப்பாக மலர்ந்துள்ளது இந்த இதழ்.
– ஒளி