நல்ல மனைவியின் துணை இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற அறிமுகத்துடன் துவங்கும் கதை நுால். அங்கங்கே புகைப்படங்கள், கணவன் – மனைவி இசைக் கச்சேரி என்று படங்கள் உள்ளன.
நல்லாசிரியர் விருது மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற தகவல்கள் சுரங்கம். சித்தம் போக்கு சிவம் போக்கு என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்தால் எந்த வியாதியும் அண்டாது என்பது போன்ற கருத்துகள் உள்ளன.
வெளிநாட்டு பயண கஷ்ட அனுபவங்கள் உள்ளன. சாஸ்திரம், சம்பிரதாயம் மனிதர்கள் தான் ஏற்படுத்திக் கொண்டனர். அதை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் போன்ற தத்துவார்த்த உண்மைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல மனைவி, வேலைக்காரி அமைய வேண்டும் என்பது முத்தாய்ப்பாக உள்ளது.
– சீத்தலைச் சாத்தன்