இலங்கை தமிழர்களின் வாழ்வு நிகழ்வுகள் கதைகளாக புனையப்பட்டுள்ள நுால். சாதி, சமயம், சடங்கு பார்த்து, தமிழன் ஒன்றும் இல்லாமல் போனது தான் மிச்சம் என ஏக்கங்களை பதிவு செய்கிறது.
சிலரின் அன்புக்கு ஏங்குவோர் பலரது அன்பை நிராகரிப்பதும், பெற்றோரை சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக நினைத்தாவது முதியோர் இல்லத்தில் சேர்க்காதீர்கள் என்பது போன்று சமூக அக்கறையுடன் புனையப்பட்டுள்ளன. சிறுவர்கள் சீர்கெடாமல் நெறிப்படுத்துகிறது, ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ கதை. கணவன் – மனைவி ஊடலால் ஏற்பட்ட பிரிவு நிரந்தரமாகாமல் புதல்வனால் சேர்வதை உணர்த்துகிறது, ‘உறவும் பிரிவும்’ என்ற கதை.
சமூக அக்கறை, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால்.
-–- புலவர் சு.மதியழகன்