இரு குறு நாவல்களின் தொகுப்பு நுால்.
சொந்தமாக கிளினிக் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர். வாரத்தில் இருவருக்கு கட்டணம் இன்றி மருத்துவம் பார்க்கும் கனிவு மிக்கவர். வசதியான மாமன், தன் மகளை மணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுக்கிறார். மணம் செய்து கொள்ளாமல் வாழ்வைக் கழிப்பவர்.
எதிர் வீட்டில் நடுத்தர குடும்ப பெண், உழைப்பால் தங்கைக்கு மணமுடிக்கிறாள். தந்தைக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மீது ஈர்ப்பு கொண்டாள். இருவரின் காதல் நிறைவேறியதா என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது. அடுத்த குறுநாவலில், தற்கொலை செய்து கொண்ட தன் அக்காவின் மரணத்தில் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.
-– புலவர் சு.மதியழகன்