இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர் படைப்பின் தொகுப்பு நுால். இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், இனப் போராட்டத்தையும், தமிழ் மக்கள் துன்பங்களையும் எடுத்துரைக்கிறது.
முதல் கதையில் ஏவுகணைகளை ஏவி குடியிருப்புப் பகுதிகளையும், மக்களையும் அழித்த தன்மையைக் கண் முன் காட்சிப்படுத்தியுள்ளார். இரண்டாவது, ‘பயங்கரவாதி’ என்ற கதை மனதை திருகிப் பிசைகிறது. இந்தக் கதையில் மாணவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். அவனைப் பயங்கரவாதி என முத்திரை குத்தியதை உணர்த்தியுள்ளார்.
எல்லா கதைகளிலும் தமிழர் இன்னல்கள் அடுக்கடுக்காகக் கூறப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களின் பேச்சு மொழி நடை, இலங்கைத் தெருக்களில் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் உள்ளது.
– முகிலை ராசபாண்டியன்