வாழ்க்கையில் முன்னேறத் துாண்டும் வகையிலான அறவுரைகளும், வழிமுறைகளும், நெறிமுறைகளும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால்.
வாழ்வு சிறப்பாக அமையும் விதமாக சிவ பதிகங்களின் கூட்டுப் பிரார்த்தனை, ராமர் பட்டாபிஷேகத்தில் உள்ள சிறப்புகள், விதுரரின் பண்பாடு மேன்மை போன்றவை விரித்துரைக்கப்பட்டுள்ளன.
சிராவண மாதத்தில் நடக்கும் மங்கள விரதங்கள், திருச்சானுாரில் வரலட்சுமி விரதம், ஐஸ்வர்யம் பெருக கவுரி விரதம், சகஸ்ரநாம மகிமைகள், ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தரப்பட்டுள்ளது.
தியாக பிரம்ம கீர்த்தனைகளில் ராமர் பெருமைகள், வெற்றியை குவிக்கும் விஜயதசமி, காந்திஜியின் மேற்கோள்கள் என வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்