வித்தியாசமான கதை நுால். தமிழும் ஆங்கிலமும் கலந்து இருந்தாலும் புரிகிறது. இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தலைப்புக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், எத்தனை கொலைகள்; ஏன் இத்தனை என்ற கேள்வி எழுகிறது. புதுமாதிரி வியாதிகளின் பெயர்கள், மருந்துகளின் பெயர்களை காணும் போது இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா என எண்ணத் தோன்றுகிறது.
பெயரை காக்க நிர்வாகமே மருத்துவமனைக்கு தீ வைக்கிறது. பறிபோன உயிர்களை பற்றி கவலைப்படவில்லை. நெஞ்சம் படபடக்கிறது. இடையில் வாடகைத்தாய், அவளுக்கு ஒரு காதலன். அவர்கள் துருப்புச் சீட்டாக இருப்பதால் இன்ஸ்பெக்டருக்கு சிக்கல்கள். பின்பு தீர்வு, காதலியின் உதவி என நீளமாக இருக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்