முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் விருத்தப்பாக்களில் கூறும் நுால். காவியக் காண்டம், ஆளுமைக் காண்டம், அரசியல் காண்டம் என, 30 படலங்களைக் கொண்டு விளங்குகிறது.
திருக்குவளையில் பிறந்தது துவங்கி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், கல்லக்குடி போராட்டம், சிறைபட்ட நிகழ்வு, தேர்தல் களம், நாடகங்களில் கொள்கை பரப்பியமை, ஆட்சிக் கட்டிலில் ஏறியது விளக்கப்பட்டுள்ளது.
சாதனைகளாக செம்மொழி மாநாடு, உழவர் சந்தை, சமத்துவபுரம் மற்றும் தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத்தமிழ் போன்றவற்றை உருவாக்கியது குறித்து கூறுகிறது. ஆங்காங்கே வரலாற்று நிகழ்வுகள் எளிய விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாற்று காவியமாக மிளிரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்