வேத கால வரலாறு, ஹீப்ரு நாகரிகம், மாயா நாகரிகம், புத்த மதம் போன்ற பொருண்மைகளில் தகவல்களை தரும் நுால். சமயம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் போன்றவற்றை விளக்குகிறது.
பூமியில் முதல் உயிரினம் பற்றிய தகவல்கள் உள்ளன. தண்ணீரின் வழி தோன்றிய, ‘புரோட்டோசோவா’ என்ற உருவில் இருந்து தான் உயிரினம் உருவாயிற்று என விளக்குகிறது. விவசாயம் போன்ற அடிப்படை தேவை, நதிக்கரைகளில் கிடைத்த ஆதாரங்களை விளக்குகிறது. கடல் வழி கண்டுபிடிப்புகள் பற்றி கூறுகிறது.
வேதம், ஆகமம் பற்றிய தகவல்களை தருகிறது. இயற்கையை வழிபட்டதற்கு விளக்கம் தருகிறது. தவறான பதிலை விட மவுனம் மிகச் சிறந்தது என்று விவேகானந்தர் பொன்மொழிகளையும் விளக்குகிறது.
– பேராசிரியர் ரா.நாராயணன்