இறை பக்தியை உணரும் வகையிலான பாடல்களின் தொகுப்பு நுால். சபரிமலை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளும் உள்ளன.
பிள்ளையாரை துதிக்க ஆறு பாடல்கள் புத்தகத்தின் முதல் பகுதியில் தரப்பட்டுள்ளன. அடுத்து, சிவனை போற்றும் பாடல்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து, அம்மனை மனமுருக பாடுவதற்கு உகந்தவையும், விஷ்ணுவை துதிப்பதற்கு ஏற்ற பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
கிராம தெய்வமான கருப்பரை துதித்து, மூன்று பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அடுத்து, முருகனை மனம் உருக வேண்டும் பாடல்கள் உள்ளன. பிற்பகுதியில் அய்யப்பன் துதிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பக்தியின் தீவிரத்தை உணர உதவும் பாடல்களின் தொகுப்பு நுால்.
– ராம்