தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பயணம் செய்த அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். சுற்றுலா சார்ந்த தகவல்களை அந்த நாட்டின் வரலாற்று பின்னணியுடன் தருகிறது.
வியட்நாம் நாட்டில் சுற்றிப் பார்த்த ஒவ்வொரு பகுதியையும் அரசியல், வரலாற்று பின்புல தகவல்களுடன் தருகிறது. பயணச் செய்தியின் ஊடே அந்தந்த பகுதியை புரிந்து கொள்ளவும், உலக அளவில் உள்ள மதிப்பை தெரிந்து கொள்ளவும் ஏதுவாக அமைந்துள்ளது.
பார்க்கும் இடங்கள், பணத்தை மிச்சமாக்கி சுலபமாக பயணம் செய்யும் நடைமுறைகள் விளக்கமாக தரப்பட்டு உள்ளன. நாட்டின் பொதுவான எண்ணம், அமெரிக்காவுடன் நடந்த போரின் விளைவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நாட்டுப்பற்று என தகவல்களை உடைய நுால்.
– மதி