இளமை, காதல், ஞானம் என்ற கருத்துக்களில் பாடல்கள் அடங்கிய நுால். திரைப்பட பாடல்கள், இசையமைத்தவர்கள், பாடியவர்கள் பெயர்களோடு தரப்பட்டுள்ளன. ‘பாதங்கள் களைக்கும் பயணத்தை நிறுத்தும் மரணத்தின் மடி உன்னை சுமக்கும்’ என சொல்கிறது.
புத்தகங்கள் வாங்காவிட்டால் பிரமிப்பு புதைந்து போன ரகசியங்களாகி விடும் என்பதை, ‘புத்தியுள்ளது வெற்றியில்லையே; வித்தையுள்ளது விற்கவில்லையே’ என வலியுறுத்துகிறது.
போதிப்பது என்பது விதை நெல்லை எடுத்து பாறையில் விதைப்பது போன்றது. எனவே, ஞானத்தை தேடி போக வேண்டும் என்பதை, ‘சிந்தையில் ஆயிரம் நெல்லு மணி; அதை சிந்தியே செய்யணும் சாகுபடி’ என பதிவிட்டுள்ளது. கலைமகள் காலம் பார்த்து வருவாள் என அறிவுறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்