உறவையும், நட்பையும் பேணும் வழிமுறைகளை உரைக்கும் நுால்.
சமூகத்தில் மனிதர்கள் நல்லுறவுடன் இயங்க வேண்டியது அவசியம். அதற்காக முடிந்தவரை, குடும்ப நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்வதை வலியுறுத்துகிறது. உலகமே சம்பிரதாயங்களில் அழுந்திக் கிடப்பதை விவரிக்கிறது. ஒரு செயலுக்கு நன்றி சொல்வதால் நட்பும், நல்லுறவும் வலுப்பெறும் என போதிக்கிறது.
குடும்ப உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் தண்டவாளம் போல சரியான இடைவெளியை பேணிக்கொள்ள வேண்டும் என்கிறது. கருத்துக்கள் ஆழ்ந்து யோசித்து சொல்லப்பட்டுள்ளன.
‘அன்பைப் பராமரிக்கலாம்; வம்பைப் பராமரிக்கக் கூடாது’ என அறிவுரை தருகிறது.
உறவு, நட்பு, குடும்ப வாழ்வு சிறக்க படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்