மொத்தம், 22 சிறுகதைகள் உடைய தொகுப்பு நுால். தம்பதியின் அக்கறையான கோபம், கோபத்தை தணிக்கும் அன்பான சிரிப்பை, ‘சொக்குப்பொடி’ கதை உணர்த்துகிறது.
தொலைபேசியும், அலைபேசியும் இல்லையென்றால், தனியாக இருக்கும் முதியவர்களுக்கு வாழ்க்கை மவுன விரதமாகி விடும் என, ‘மாதவிலக்கு’ கதை புரிய வைக்கிறது. ஏழை வீட்டில் கல்வி எவ்வளவு அவசியம் என, ‘பூ’ கதை வலியுறுத்துகிறது.
வாகனம் ஓட்டும்போது, சாலை விதிகளை எப்படி மதிக்க வேண்டும் என்பதை, ‘தலைக்கவசம்’ கதை எச்சரிக்கிறது. இறப்புக்கு பின் தகனம் செய்ய இடையூறு செய்யும் மனங்களை, ‘தீட்டு’ கதை தோலுரிக்கிறது. ஒவ்வொரு கதையும், சமூக அவலங்களை சாடுவதுடன், பார்த்த, கேட்ட நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன.
– -டி.எஸ்.ராயன்