விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து கனவுகளை ஆராய்ந்து கருத்துக்களை கூறும் நுால். கனவுகளுக்கு மூலம் அடிமனதில் உறங்கும் காமம், சினம், அச்சம் என கருத்துக்களை பகிர்கிறது.
கனவு என்பது ஒரு சுவையான அனுபவம். கனவு காணாதவர் உலகில் யாரும் இல்லை. உப்பு அதிகம் உள்ள உணவை இரவில் சாப்பிட்டால் துாங்கும்போது தாகம் எடுக்கும். அப்போது, நிச்சயமாக தாகசாந்தி கனவு வருமாம். இது ஒரு ஆய்வில் வந்துள்ள முடிவு.
பெரும்பாலும் பாலியல் உணர்ச்சி சம்பந்தப்பட்ட கனவுகள் தான் மனிதர்களுக்கு அதிகமாக வருமாம். கனவுகளின் ஞாபக சக்தி பல மடங்கு அதிகம். பெண்களின் கனவுகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நல்ல கனவுகள் பலிப்பதாக அமையட்டும்.
– சீத்தலைச் சாத்தன்