மாந்திரீகம் பற்றி எடுத்துரைக்கும் நுால். கேரளாவில் அதிகமாக உள்ளது பற்றி கூறுகிறது. மலையாள மொழியில் மந்திர சாஸ்திரங்கள் பெருக, வடமொழி பற்றும் பயிற்சியும் அதிகம் என்கிறது. நம்பூதிரிகள் வேதங்களை நன்கு கற்றதால், மந்திரங்களை சிறப்பாக உச்சரிக்கும் திறமை உள்ளதாக குறிப்பிடுகிறது.
மாந்தி என்பவன் சனியின் மைந்தன். ஜாதகத்தில் அது இருண்ட கிரகம். இதுவே மாந்திரீகத்தின் அதி தேவதை. மலையாள ஜாதகத்தில் மாந்திக்கு மிக முக்கிய இடம் கொடுத்து பலன் கணிப்பர் என்கிறது. பீட பூஜை, கலச பூஜை பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சுளுக்கு நீக்கும் மந்திரம், பாம்பு கடி விஷம் நீக்கும் மந்திரத்தை விளக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்