பவுத்த மரபும், அதைத் தொடர்ந்து திராவிட மரபும் சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த வரலாறு தகவல்களை பதிவு செய்திருக்கும் நுால். புத்தர் சீர்திருத்தங்களை தெளிவாக விவரிக்கிறது.
திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களுக்கு முன்னோடியாக விளங்கும் அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், ரெவரென்ட் ஜான் ரத்தினம், விருதை சிவஞான யோகி ஆகியோரின் அரும்பணிகளை அறிய வைக்கிறது.
அசோகர் காலத்துக்குப் பின் பவுத்த சமயம் முடக்கப்பட்டு, கல்வி மறுப்புச் சூழல் உருவானதை உணர்த்துகிறது. பேராசிரியர் லட்சுமி நரசுவின் ஆய்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனித நல்லிணக்கத்தை நோக்கிய சமூகப் பார்வைகள் அடங்கிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு