திருச்சிற்றம்பல திருவந்தாதியின் முதல் சீர், ‘ஆடியபாதமே’ என்று துவங்குகிறது. நுாறாவது பாடலின் இறுதிச் சீர், ‘ஆடு’ என்று முடிந்து, மாலை போல தொடுக்கப்பட்டுள்ளது.
தேவார திருவாசகப் பாடல்கள், சங்க இலக்கிய கருத்துகளை உள்வாங்கி அழகுற யாத்துள்ளார். ‘சிவாயநம’ என்று சொன்னால் தீவினை நீங்கும் என்கிறது. நடராச பெருமான் அருளால், தேவாரம் கிடைக்கப் பெற்ற தகவலை தெரிவிக்கிறது.
‘நடராச பெருமான் வாழ்த்த வாய் தந்தார்; தாழ்த்தி வணங்க தலை தந்தார்’ என்று பக்தி நயம் சொட்ட கவி பாடியுள்ளார். ஆடிய பாதத்தை நாடிய நெஞ்சத்தால் பாடிய பாங்கு கூறப்பட்டுள்ளது. ஆடவல்லானின் புகழ் அழகாகக் கூறப்பட்டுள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்