தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களை திரட்டி எழுதப்பட்டுள்ள நுால். இந்த நாட்டில் பார்க்க வேண்டிய பகுதிகளை தனித்தனியாக பட்டியலிட்டு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் பயணம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை தெளிவாக தெரிவித்துள்ளன. அடுத்து, தாய்லாந்து நாட்டில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, வழிகாட்டும் வரைபடத்தை தருகிறது. தொடர்ந்து, அங்கு பார்க்க வேண்டிய முக்கிய பகுதிகளுக்கு நேரடியாக அழைத்து செல்வது போல் விவரிக்கிறது.
பயணக் கட்டுரையில், அந்த நாட்டு அரசியல் வரலாறு, இடங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. நாட்டின் தனிச்சிறப்பை அறிய உதவுகிறது.
– ராம்