சத்யசாயி பாபாவின் சிறு வயது வாழ்க்கை முதல் ஒவ்வொரு வளர்ச்சியையும் தரும் நுால். உரிய புகைப்படங்கள் அமைந்து சிலிர்ப்பூட்டுகின்றன. ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பாக கீதையின் வாசகங்கள் தத்துவ புதையல்களாக உள்ளன.
சத்திய நாராயணா, தன்னை சாய்பாபா என்று அறிவித்து கொண்டதும், வியாழக்கிழமை தோறும் முக்கிய தினங்களாக மாறத் துவங்கியது. முதல் அவதாரமான சீரடி சாய்பாபாவை போற்ற எடுத்த அவதாரம் சத்யசாய்பாபா என்பது நிகழ்ச்சிகளின் வழியாக நிரூபிக்கப்பட்டது.
மிகச் சிறிய கிராமமான புட்டபர்த்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிரசாந்தி நிலையம், சத்ய சாய்பாபாவின் அருட்பார்வையால் மிகப் பிரமாண்டமாகி இருக்கிறது. இங்கே கல்வி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் என கொடைகளை விவரிக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்