மனம் நிலை தவறி வருந்தும் போது, உரிய காரணத்தை கண்டறிந்து, கவுன்சிலிங் வழியாக தீர்த்து வைப்பதை அனுபவ ரீதியாக உரைக்கும் நுால். கவலையில் இருந்து மீண்ட, 25 பேர் கதையை விவரிக்கிறது.
தீர்க்க முடியாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் இறுக்கம், தவறான புரிதலால் கவலை, வியாதிகளால் உருவாகும் மனப்பிறழ்வுகளில் இருந்து விடுதலை பெறுவது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையால் மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள், துாக்கமின்மை பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நடைமுறை குறித்தும் குறிப்பிடுகிறது. குழந்தை வளர்ப்பு, கல்வியில் மதிப்பெண் குறைபாட்டால் எண்ண மாறுதல்களை தீர்ப்பது பற்றியும் எளிய உண்மைகளை தெளிவுபடுத்துகிறது. மனதை இதமாக்கும் நுால்.
– ஒளி