லெமூரியா கண்டம் பற்றி துவங்கி, குமரி கண்டத்தில் இருந்து உலக நாடுகளின் எல்லையை விவரிக்கும் நுால். பூமியின் தோற்றம், சிந்து சமவெளியின் மக்கள் தொகை, தமிழ் மொழியின் தோற்றம், மூழ்கிய குமரி கண்டம், ஆட்சியாளர்கள், புத்த மத தோற்றம் போன்ற தகவல்களை ஆண்டு வாரியாக குறிப்பிடுகிறது.
தமிழ் சொற்களை பிரதிபலிக்கும், பிற நாட்டில் உள்ள பெயர்களையும் கூறுகிறது. தாய்லாந்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள உறவை பகிர்கிறது. வாழ்க்கை முறைகள், உடை, உணவு, திருமணம், பொழுதுபோக்கு, கடல் கடந்த வணிகம், வேலன் என்ற தெய்வ வழிபாடு போன்ற வியப்பூட்டும் தகவல்கள் ஏராளம்.
தமிழ் மொழியின் தொன்மையை உணர்த்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்