இஸ்லாம் பெருமைகளை சிறுகதைகள் வாயிலாக விளக்கியுள்ள நுால்.
துவக்கத்தில் உள்ள, ‘பேரன்’ சிறுகதை, தாத்தாவின் பேரன்பை கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இமாம்கள் நிலை விரிவாக பேசப்பட்டுள்ளது.
பேத்தியின் பிறந்த நாள் பரிசாக, முதியவர் அளிக்கும் பூனைக்குட்டி பற்றிய தகவல்கள் சுவாரசியம். அனைத்து மதங்களையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. மதங்களைத் தாண்டி, அன்பே அடிப்படை என்பது கூறப்பட்டுள்ளது.
தொழுகையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், ‘சுத்ரா’வை பயன்படுத்தும் முறை, அதன் நோக்கம் பற்றிய தகவல்கள் விளக்கமாக உள்ளன. தகவல் தொடர்பு மேம்பட வேண்டும். நம்பிக்கையும், மரியாதையும் துளிர்க்க வேண்டும் போன்ற நல்வழிகாட்டும் கருத்துகள் பேசப்பட்டுள்ளன.
– முகில் குமரன்