எதையும் பகுப்பாய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என உணர்த்தும் நுால். சிக்கலை முன் வைத்து, சிந்தனையால் பரிசோதனை செய்தால், அறிவுப்பூர்வமான தீர்வு கிடைக்கும் என வலியுறுத்துகிறது.
அலை பாயும் மனதை ஒருங்கிணைத்து, ஆய்வுக் கூடமாக மாற்றிய விஞ்ஞானிகள் குறித்து பேசுகிறது. அறிவியல் அறிஞர்கள், மன ஓட்டத்தை கற்பனை செய்து, வடிவம் கொடுத்து, நடைமுறைக்கு கொண்டு வந்தது பற்றி கூறுகிறது. மன ஓட்டம், உளவியல் குறித்து அலசுகிறது. அறிவியலை புரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்