திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூலமும், விளக்கவுரையும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். மூவாயிரம் பாடல்கள், ஒன்பது தந்திரங்களாக பகுத்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
சிவனைத் தொழுவதாக விளங்கும் பாடல்களோடு பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருளை விரிவாக எடுத்துரைக்கிறது.
திருக்குறளை அடியொற்றி இயற்றப்பட்ட பாடல்களில் நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, கள்ளுண்ணாமை, அன்புடைமை போன்ற கருத்துகள் வெளிப்படுவதை காண முடிகிறது.
சிறந்த குருவை வாங்குவது உயர்ந்த இறையை வணங்குவதற்கு ஒப்பானது என்பதை தெரிவிக்கிறது. அகமும் புறமும் அருளொளியோடு துலங்குவதற்கு வழிகாட்டும் ஆன்மிகக் கருவூலம் இந்த நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு