இசை வழியாக இறையருள் பெறும் வகையில் செவ்வியல் கலையான கர்நாடக இசையை முறைப்படி கற்க வழிகாட்டியாக உதவும் நுால். இசைக்கலை நுணுக்கங்களை, இலக்கணங்களை தெளிவாக விளக்குகிறது.
முயற்சி செய்து பயிற்சி செய்தால் இசையில் ஜொலிக்கலாம் என நம்பிக்கையூட்டுகிறது.
ஜண்ட வரிசை, தாளம், அலங்காரம் என கர்நாடக இசையின் இலக்கண மரபுகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. விநாயகர் கீதம், மஹேசவர கீதம், விஷ்ணு கீதம் பாடுவதற்கான வழிமுறைகளும், நோட்டுகளும் தரப்பட்டுள்ளன. மொத்தம், 14 அத்தியாயங்களில், இசையின் அடிப்படைகளை கற்பிக்கிறது. இசை பயிற்சிக்கு உதவும் நுால்.
– ஒளி