கட்டுமான துறை சார்ந்த தொழில் நுட்ப அனுபவ அறிவை வெளிப்படுத்தும் நுால். கட்டுமான பணிகளின் போது ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வுகள் சொல்லப்பட்டு உள்ளன. நுட்பமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
கட்டடம் அமைக்கும் நிலத்தில் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆலோசனைகளை முன் வைக்கிறது. கட்டடம் அதன் அருகே அமையும் கிணறு என சின்னச் சின்ன விஷயங்களையும் தொட்டுக்காட்டி ஆலோசனைகளை பகிர்கிறது.
கட்டுமான பணியின் போது ஏற்படும் நீர் கசிவை சரி செய்தல், மணலால் ஏற்படும் பிரச்னைகளை காட்டுகிறது. குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான ஆலோசனையையும் தருகிறது. கட்டுமானப் பணி பற்றிய பயிற்சி நுால்.
– மதி