தமிழில் முதலில் எழுதப்பட்ட மூன்று நாவல்களை ஆய்வு செய்து கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் நாவல் கதைகளின் திறனாய்வாக மலர்ந்துள்ளது.
தமிழ் நாவலின் தோற்றம் குறித்து முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து துவக்க கால தமிழ் நாவலாசிரியர்களை அவர்களது குடும்பப் பின்னணியுடன் மிகத் தெளிவாக அறிமுகம் செய்கிறது.
தொடர்ந்து, தமிழில் எழுதப்பட்ட மூன்று நாவல்களும் கால வரிசைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கதை, பாத்திரங்கள் படைப்பு, துணை பாத்திரங்கள் என படிப்படியாக அணுகி கருத்துக்களை தெரிவிக்கிறது. துவக்க காலத் தமிழ் நாவல் ஆராய்ச்சி நுால்.
– ஒளி